மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் சேவை இன்று ரத்து

 
train

மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் சேவை இன்று ரத்தாகியுள்ளது.

train

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு தினசரி காலை 7:10 மணிக்கு நீலகிரி மலை ரயில் இயக்கப்படுகிறது.  அதேபோல் ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு மதியம் 2 மணிக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.  இதனால் உள்ளூர் மக்கள் மட்டும் இன்றி உலக நாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஊட்டிக்கு வருகை தருகின்றனர்.   இந்த மலை ரயில் பயணம் மூலம் நீலகிரி மலையின் இயற்கை எழிலை  சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசிப்பது வழக்கம். இந்த சூழலில்  கனமழையால் கல்லார் - அடர்லி ரயில் நிலையங்களுக்கு இடையே பல இடங்களில் பாறைகள் விழுந்து சேதமான காரணத்தால் மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் சேவை ரத்தானது.மேட்டுப்பாளையம் - உதகை இடையேயான மலை ரயில் சேவை மீண்டும் தொடங்கியது. மலை ரயில் இருப்புப் பாதையில் மண் சரிவு ஏற்பட்டு சீரமைப்பு பணிகள் நடைபெற்ற நிலையில், 4 நாட்களுக்குப்பின் ரயில் சேவை தொடங்கியது.

train
 

இந்நிலையில்  கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் முதல் உதகை வரையிலான மலை ரயில் சேவை இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது மழை காரணமாக இருப்புப் பாதையில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளதால் மலை ரயில் சேவை இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.