தமிழகத்தில் இரவுநேர ஊடங்கு எதிரொலி- மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்

 
metro

கொரோனா மற்றும் ஒமிக்ரான் பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இரவு நேர ஊரடங்கும் போது மாநிலத்திற்குள் பொது மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்து சேவைகள் அனுமதிக்கப்படும் எனவும், பொது பேருந்துகள் மற்றும் புறநகர் ரயில்களில் உள்ள இருக்கைகளில் 50% மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனிடையே நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் அத்தியாவசியச் செயல்பாடுகளுக்கு மட்டும் அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் மெட்ரோ ரயில் சேவைகளுக்கான நேரத்தை மாற்றி மெட்ரோ ரயில் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. 

சென்னை மெட்ரோ ரயிலில் இன்றும் இலவசம்...! | Chennai Metro Rail offers free  ride Today | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil  News Online | Tamilnadu News

அதன்படி, சென்னை மெட்ரோ ரயில்கள் நாளை முதல் (6.1.2022) வார நாட்களில் (திங்கள் முதல்- சனிக்கிழமை) வரை  காலை 5.30 மணி முதல் இரவு 9 மணி வரை இயக்கப்படும். நெரிசல் மிகு நேரங்களில் 5 நிமிட இடைவெளிகளிலும் மற்ற நேரங்களில் 10 நிமிட இடைவெளியிலும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்

அனைத்து முனையங்களிலிருந்தும் கடைசி மெட்ரோ ரயில் சேவை இரவு 9 மணிக்கு தொடங்கி இரவு 10 மணிக்கு முனையத்தை வந்தடையும், கூடுதலாக மெட்ரோ ரயில் சேவைகள் வரும் 9-1-2021(ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.