தீபாவளி பண்டிகை - மெட்ரோ ரயில் சேவை இரவு 11 மணி வரை நீட்டிப்பு!

 
metro

தீபாவளி பண்டிகை மற்றும் தொடர் விடுமுறையை ஒட்டி மெட்ரோ ரயில்கள் சேவை இரவு 11 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாட்டப்பட்டு வருகிறது. புத்தாடை அணிந்தும், பட்டாசுகள் வெடித்தும் மக்கள் உற்சாகமாக தீபாவளியை கொண்டாடி வருகின்றனர். இதேபோல் இனிப்புகள் செய்து தங்களது உறவினர்களுக்கு பறிமாறி தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அயோத்தியில் 25 லட்சம் அகல் விளக்குகளை ஏற்றி தீபாவளி கொண்டாட்டப்பட்டது. விண்ணை முட்டும் இசை முழக்கங்களுடன் மக்கள் ஆரவாரம் செய்தனர்.

இந்த நிலையில், தீபாவளி பண்டிகை தொடர் விடுமுறையை ஒட்டி மெட்ரோ ரயில்கள் சேவை இரவு 11 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இன்று மற்றும் நாளை காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட உள்ளன. காலை 5 மணி முதல் மதியம் 12 மணி வரை மற்றும் இரவு 8 முதல் 10 வரை 10 நிமிட இடைவெளியில் மெட்ரோ இயக்கப்படவுள்ளன. மதியம் 12 முதல் இரவு 8 மணி வரை 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படவுள்ளன.