நாளை ஒருநாள் மட்டும் மெட்ரோ ரயில் சேவை நேரம் நீட்டிப்பு

 
மெட்ரோ ரயில்

சென்னையில் நாளை ஒருநாள் மட்டும் மெட்ரோ ரயில் சேவை நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.

metro

சனி, ஞாயிறு மற்றும் விநாயகர் சதுர்த்தி விடுமுறையை முன்னிட்டு சென்னையில் வசித்து வரும் வெளியூர்வாசிகள் பலரும் சொந்த ஊர் செல்ல தயாராகி வருகின்றனர். அவர்களின் வசதிக்காக தமிழக அரசின் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தொடர் விடுமுறையை முன்னிட்டு நாளை மட்டும் மெட்ரோ ரயில் சேவை நேரம் நீட்டிக்கப்படுவதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
 
இது தொடர்பாக மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், விநாயகர் சதுர்த்தி மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு, சொந்த ஊருக்கு செல்லும் மெட்ரோ இரயில் பயணிகளின் வசதிக்காக நாளை(15/09/2023) மட்டும் நெரிசல்மிகு சேவை நேரம் இரவு 8 மணி முதல் 10 மணி வரை 6 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். மேலும் மெட்ரோ ரயில் சேவை இரவு 10 மணி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. எனவே மெட்ரோ இரயில் பயணிகள் நீட்டிக்கப்பட்ட நெரிசல்மிகு நேரங்களில் இயக்கப்படும் மெட்ரோ இரயில் சேவையை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேற்கண்ட மெட்ரோ இரயில் நீட்டிப்பு சேவைகள் நாளை(15/09/2023)மட்டுமே” என தெரிவிக்கப்பட்டுள்ளது.