வரும் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12 மணி வரை மெட்ரோ ரயில் சேவை

 
metro

சென்னை மெட்ரோ ரயில் சேவைகள் வரும் ஞாயிற்று கிழமை,  நள்ளிரவு 12 மணி வரை செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

metro

சென்னை  நேரு உள்விளையாட்டு அரங்கில் திரை துறையில் பணியாற்றும் லைட் மேன்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும்,  அவர்களுக்காக நிதி திரட்டும் வகையிலும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் (அன்பின் சிறகுகள் - Wing of Love) என்ற பெயரில் சினிமா பாடல்கள் அல்லாது 'Sufi' பாடல்கள் மட்டும் கொண்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளார். 

இந்த நிகழ்ச்சி வரும் 19-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7 மணி முதல் 11.30 மணி வரை நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சி டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு அருகில் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளதால் நிகழ்ச்சியை கண்டுகளிக்க வரும் மெட்ரோ பயணிகள் மற்றும் ரசிகர்களின்  வசதிக்காக 19ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று இரவு 11 மணி வரை இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில் சேவைகள் அன்று மட்டும் நள்ளிரவு 12 மணி வரை நீட்டிக்கப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Rajasekar on Twitter: "For The first time in Chennai "WINGS OF LOVE - The @ arrahman - SUFI MUSIC CONCERT . Date : 19th March 2023 Location : Nehru  indoor stadium , Chennai.


மேலும் மெட்ரோ பயணிகள் மற்றும் பொதுமக்கள், மார்ச் 19 ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள  வாகன நிறுத்துமிடத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் வாகன இணைப்பு சேவை  டாக்டர் எம்.ஜி. ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையம் முதல் நேரு உள்விளையாட்டு அரங்கம் வரை மாலை 5 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை இயக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது. அதன்படி, அனைத்து முனையங்களிலிருந்தும் (விமான நிலைய மெட்ரோ, விம்கோ நகர் பணிமனை மெட்ரோ, டாக்டர் எம்.ஜி. ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ, பரங்கிமலை மெட்ரோ) கடைசி ரயில் நள்ளிரவு 12:00 மணிக்கு புறப்படும்.