சிக்னல் கோளாறு காரணமாக சென்னையில் மெட்ரோ ரயில் சேவையில் பாதிப்பு

 
metro

சிக்னல் கோளாறு காரணமாக சென்னையில் மெட்ரோ ரயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Tunneling works commenced for Chennai Metro Phase 2 Corridors

 சிக்னல் கோளாறு காரணமாக சென்னையில் மெட்ரோ ரயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக  விமான நிலையத்தில் இருந்து புறப்படும் மெட்ரோ ரயில்கள் தாமதமானதால் பயணிகள் கடும் அவதி க்குள்ளாகியுள்ளனர்

தொழில்நுட்ப கோளாறு காரணமாக, லிட்டில் மவுண்டில் இருந்து, அறிஞர் அண்ணா ஆலந்தூர் வரை, ஒற்றை வழித்தடத்தில் இயக்கப்படுகிறது. விம்கோ நகர் டெப்போவில் இருந்து ப்ளூ லைனில் உள்ள லிட்டில் மவுண்ட் வரை சாதாரண சேவைகள் தற்போது இயக்கப்படுகின்றன. 



அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ மற்றும் விமான நிலையம் இடையே ஷார்ட் லூப் சேவை திட்டமிடப்பட்டுள்ளது. வழக்கமான சேவைகள் கிரீன் லைனில் இயக்கப்படுகின்றன. அதற்கேற்ப பயணிகள் தங்கள் பயணத்தை திட்டமிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறோம் என்று மெட்ரோ ரயில் நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.அத்துடன்  மெட்ரோ ரயில் நிறுவனம் மற்றொரு பதிவில், லிட்டில் மவுண்ட் டு விம்கோ நகர் டிப்போ - 5 நிமிட ஹெட்வேயுடன் சேவை, அறிஞர் அண்ணா ஆலந்தூர் விமான நிலையத்திற்கு - 5 நிமிட ஹெட்வேயுடன் சேவை, லிட்டில் மவுண்ட் டு அறிஞர் அண்ணா ஆலந்தூர் - 10 நிமிட ஹெட்வேயுடன் சேவை என்று குறிப்பிட்டுள்ளது.