சென்னையில் மெட்ரோ ரயில் இயக்கம் சீரானது!!

 
metro

சென்னையில் மெட்ரோ ரயில் இயக்கம் சீரானது என்று மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

metro

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக  சென்னை மெட்ரோ ரயில் சேவையில் பாதிப்பு  ஏற்பட்டது. மீனம்பாக்கம் - விமான நிலையம் இடையே தொழில்நுட்பக் கோளாறால் நீல வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  சென்னை சென்ட்ரலில் இருந்து கோயம்பேடு வழியாக விமான நிலையம் செல்லும் நீல வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டது. விம்கோ நகர்-விமான நிலையம், சென்ட்ரல் - பரங்கிமலை இடையே வழக்கம் போல் ரயில்கள் இயக்கப்படுகிறது. சென்ட்ரலில் இருந்து விமான நிலையம் செல்ல ஆலந்தூரில் பச்சை வழித்தடத்திற்கு மாற மெட்ரோ நிர்வாகம் அறிவுறுத்தியது. 


 


 

இந்நிலையில் சென்ட்ரல்-விமான நிலையம் இடையேயான வழித்தடத்தில் தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யப்பட்டதால் சென்னையில் மெட்ரோ ரயில் சேவை மீண்டும் சீரானது.  பச்சை மற்றும் நீல வழித்தடத்தில் மெட்ரோ ரயில்கள் வழக்கம்போல் இயக்கப்பட்டு வருகின்றன; காலையில் இருந்து பச்சை வழித்தடத்தில் மெட்ரோ ரத்து செய்யப்பட்ட நிலையில் கோளாறு சரிசெய்யப்பட்டது என்று மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.