இன்று முதல் இந்த மெட்ரோ ரயில் பயண அட்டை செல்லாது..!
May 1, 2026, 05:50 IST1777594833000
மெட்ரோ ரயிலில் தொடர்ந்து பயணிக்க விரும்பும் பயணிகள் அனைவரும், தங்களின் பழைய அட்டைகளை ஒப்படைத்துவிட்டு, அதற்குப் பதிலாக புதிய 'சிங்கார சென்னை அட்டை'யாக மாற்றிக் கொள்ளுமாறு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.
இந்தியா முழுவதும் உள்ள பொதுப்போக்குவரத்துச் சேவைகளில் தடையற்ற பயணத்தை உறுதி செய்யும் வகையில் இன்று முதல்(1-ந்தேதி) முதல் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் “சிங்கார சென்னை அட்டைக்கு (தேசிய பொது போக்குவரத்து அட்டை)" முழுமையாக மாற திட்டமிட்டுள்ளது.இதனால், தற்போதைய மெட்ரோ பயண அட்டைகள் இன்று முதல் செல்லாது. ஆகையால், பயணிகள் அனைவரும் தங்களின் பழைய அட்டைகளை தேசிய பொது போக்குவரத்து அட்டையாக மாற்றிக் கொள்ளுமாறு சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.

