விநாயகர் சதுர்த்தியையொட்டி மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் நேரம் மாற்றம்..!!

 
metro metro


விநாயகர் சதுர்த்தியை ஒட்டி  நாளை (ஆக 27) ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  

நாடு முழுவதும் நாளை (ஆக 27) நாட்டின்  விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது. ஆகையால் நாளை அரசு விடுமுறை என்பதால்,  மெட்ரோ ரயிலில் பயணம் செயபவர்களின் எண்ணைக்கை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்காரணமாக நாளை, ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. 
 
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “சுதந்திர தினத்தையொட்டி,  நாளை (ஆக-15)   ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணை பின்பற்றப்படும். காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரயில் சேவை இயக்கப்படும் நேர இடைவெளிகள் பின்வருமாறு: 

Metro Parking

பீக் ஹவர்ஸ் என்று சொல்லப்படும்  காலை 8 மணி முதல்  11வரை மற்றும் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலான நேரத்தில் 6 நிமிடங்கள் இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்

காலை 5மணி முதல் 8 மணி வரையிலும், நண்பகல் 11 மணி முதல் மாலை 5மணி வரையிலும்,  இரவு 8 மணி 0 10 வரையிலான நேரத்தொல்  7 நிமிட இடைவெளியிலும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். மேலும் இரவு 10 மணி முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.