"மெட்ரோவா இல்ல பியூட்டி பார்லரா?" – குளியல் உடையில் வந்து மெட்ரோவையே அலறவிட்ட பெண்!
மெட்ரோ ரயிலில் பெண் ஒருவர் குளியல் உடை அணிந்து, தலையில் டவல் கட்டியபடியும், முகத்தில் அழகு பராமரிப்பு பேட்ச்களுடன் பயணம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ரயிலில் பயணித்தபடியே தனது சரும பராமரிப்பு வழக்கத்தை அவர் மேற்கொள்வதை கண்ட சக பயணிகள் மற்றும் நெட்டிசன்கள், "இது மெட்ரோ ரயிலா அல்லது அழகு நிலையமா?" என்று கண்டனம் தெரிவித்து வருகின்றனர். நாளுக்கு நாள் இதுபோன்ற வித்தியாசமான சம்பவங்கள் டெல்லி மெட்ரோவில் அரங்கேறி வருவது பொதுமக்களிடையே பேசுபொருளாக மாறியுள்ளது.
வைரலாகி வரும் அந்த வீடியோவில், பெண் ஒருவர் குளியல் உடை அணிந்து, தலையில் டவல் கட்டியபடி மெட்ரோ ரெயிலில் அமர்ந்திருக்கிறார். மேலும், தனது கண்களுக்குக் கீழே அழகு பராமரிப்புக்கான பேட்ச்களையும் ஒட்டியுள்ளார்.
மெட்ரோ ரெயிலில் பயணம் செய்தபடியே அவர் தனது சருமப் பராமரிப்பு வழக்கத்தை மேற்கொள்வது போன்ற காட்சிகள் வீடியோவில் இடம்பெற்றுள்ளன.
இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், “இது மெட்ரோ ரெயிலா? அல்லது அழகு நிலையமா?” என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகிறது.

