மெட்ரோ பயணிகளே உஷார்! நந்தனம் நிலையத்தின் 'இந்த' நுழைவாயில் இன்று முதல் மூடல்..!
மெட்ரோ ரயில் கட்டுமானப் பணிகள் மற்றும் நிலையங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்புப் பணிகள் காரணமாக, நந்தனம் மெட்ரோ ரயில் நிலையத்தின் முக்கிய நுழை வாயில்களில் ஒன்றான பி4 (B4) நுழைவாயில் இன்று மார்ச் 23-ம் தேதி முதல் நிரந்தரமாக மூடப்படுகிறது.
பிஎஸ்என்எல் அலுவலகம் நோக்கிச் செல்லும் இந்த நுழை வாயில், உள்கட்டமைப்பு மேம் பாட்டுப் பணிகளுக்காக மூடப் படுவது அவசியம் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் (சி.எம்.ஆர்.எல்.) தெரிவித்துள்ளது. பி4 நுழைவாயில் மூடப்படுவதால் பயணிகள் சிரமத்தைத் தவிர்க்க, அதற்குப் பதிலாகப் பின் வரும் நுழைவாயில்களைப் பயன்படுத் துமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
அதே திசையில் உள்ளவை: ஏ2 (A2) மற்றும் ஏ3 (A3) நுழைவாயில்கள். எதிர்புறத்தில் உள்ளவை: பி1 (B1), பி2 (B2) மற்றும் பி3 (B3) நுழைவாயில்கள். இந்த மாற்று நுழைவாயில்கள் அனைத்தும் அண்ணா சாலை யிலேயே அமைந்துள்ளதால், பயணிகள் எளிதாக நிலையத்திற்குள் நுழையவும் வெளியேறவும் முடியும். “இந்த மாற்றம் இரண்டாம் கட்டத் திட்டத்தின் ஒரு பகுதியாகும். இது நீண்ட கால அடிப்படையில் போக்குவரத்து இணைப்பு மற்றும் பயணிகளின் வசதியை மேம்படுத்த உதவும். எதிர்காலத்தில் இரண்டாம் கட்டத் திட்டத்தின் கீழ் புதிதாகத் திறக்கப்படவுள்ள நுழைவாயில் வழியாக, நந்தனம் மெட்ரோ நிலையத்திற்கான கூடுதல் அணுகல் வசதி பயணிகளுக்கு மீண்டும் கிடைக்கும்.” பயணிகளுக்கு வழிகாட்ட நிலைய வளாகத்தில் போதுமான அடையாளப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. கூடுதல் தகவல் அல்லது உதவி தேவைப்படும் பயணிகள் நிலையப் பணியாளர்களைத் தாராளமாக அணுகலாம் என மெட்ரோ நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.
Permanent Closure of B4 Entry at Nandanam Metro Station
— Chennai Metro Rail (@cmrlofficial) March 20, 2026
Chennai Metro Rail Limited (CMRL) hereby informs all passengers and the general public that, due to ongoing Phase-II construction & Integration works at Nandanam Metro Station, the B4 entrance (towards BSNL Office) will be…

