வரும் ஏப்ரல் முதல் மெட்ரோ கார்டுகள் செல்லாது

சென்னை மக்களின் பிரதான போக்குவரத்தாக உள்ள 'மெட்ரோ ரயில்களில் தினமும் பயணம் செய்பவர்கள் க்யூ லைனை தவிர்க்க டிஜிட்டல் டிக்கெட் மற்றும் மெட்ரோ கார்டுகளை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், வரும் ஏப்ரல் முதல் இந்த மெட்ரோ கார்டுகள் செல்லுபடியாகாது என தகவல் வெளியாகியுள்ளது.
மெட்ரோ கார்டுகளுக்கு பதிலாக சிங்கார சென்னை கார்டை பயன்படுத்த தொடர்ந்து பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்த கார்டை ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவுடன் இணைந்து பயணிகளுக்கு வழங்கி வருகிறது சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம். இந்த கார்டை பயன்படுத்தி மெட்ரோ ரயிலில் மட்டுமல்லாமல், புறநகர் ரயில்கள் ரயில்கள் மற்றும் மாநகர பேருந்துகளில் கூட பயணம் செய்யலாம். இது மட்டுமல்லாமல். ஷாப்பிங், ஹோட்டல் பில்களைக் கூட இந்தக் கார்டை பயன்படுத்தி கட்டலாம்.
இந்தக் கார்டில் ரீசார்ஜ் செய்யப்பட்ட தொகை க்ளோபல் பேலன்ஸ், ரீடெயில் பேலன்ஸ் என இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்படும். க்ளோபல் பேலன்ஸை பயணங்களுக்காவும், ரீடெயில் பேலன்ஸை ஷாப்பிங்குகளுக்கும் பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த கார்டு மூலம் இந்தியா முழுவதும் உள்ள மெட்ரோ ரயிலிலும் பயணிக்க முடியும். இந்தக் கார்டு அனைத்து மெட்ரோ ரயில் நிலை கவுன்டர்களிலும் இலவசமாக வழங்கப்படுகிறது. இதில் ரீசார்ஜ் செய்துகொண்டால் மட்டும் போதும். இப்போது இருக்கும் மெட்ரோ கார்டுகள் வரும் ஏப்ரல் மாதம் வரை மட்டுமே பயன்பாட்டில் இருக்கும். அதனால், இனி அந்தக் கார்டை ரீசார்ஜ் செய்யாமல், சிங்கார சென்னை கார்டிற்கு விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்போதிருக்கும் மெட்ரோ கார்டில் இருக்கும் பேலன்ஸை முழுவதுமாக பயன்படுத்திக்கொண்டு, அந்தக் கார்டை மீண்டும் மெட்ரோ நிர்வாகத்திடமே கொடுத்து அந்த கார்டின் டெபாசிட் தொகையான ரூ.50-ஐ பெற்றுக்கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.