கள்ளக்குறிச்சி விஷச் சாராயத்தில் 8.6% முதல் 29.7% வரை மெத்தனால் கலப்பு- அரசு தகவல்

 
கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 40 ஆக உயர்வு கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 40 ஆக உயர்வு

கள்ளக்குறிச்சி  விசாசாராய சம்பவத்தில் 8.6 முதல் 29.7 சதவீதம் மெத்தனால் கலந்துள்ளது எனவும் உரிய முறையில் விசாரணை நடைபெற்றுவருவதாகவும், சிபிஐ விசாரணைக்கு அவசியமில்லை என தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம்: அடுத்தடுத்த உயிரிழப்புகளால் பலி எண்ணிக்கை  தொடர்ந்து உயர்வு - யார் காரணம்? - BBC News தமிழ்

கள்ளக்குறிச்சி விஷச்சாராயம் தொடர்பான வழக்கில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளார் . அந்த அறிக்கையில், சம்பவம் தொடர்பாக தகவல் கிடைத்தவுடன் மாவட்ட ஆட்சியர் கள்ளக்குறிச்சி மருத்துவமனைக்கு நேரில் சென்று நடவடிக்கை எடுத்தார். மேலும் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் சம்பவம் தொடர்பான வருவாய்த்துறையினர் உடனடியாக விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டவர்களுக்கு உரிய   சிகிச்சை வழங்கபட்டுள்ளது. நெடுஞ்சாலைத்துறை  அமைச்சர் எ.வ.வேலு, சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறி நிவாரண நடவடிக்கைகளை மேற்கொண்டனர். விஷச்சாராயத்தால் உயிரிழந்தவர்களுக்கு 10 லட்சம் நிவாரணமும் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கி முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டார். வழக்கினுடைய விசாரணை சிபிசிஐடிக்கு  முதலமைச்சர் உத்தரவின் பேரில் மாற்றப்பட்டுள்ளது. உடனடியாக விசாரணை அதிகாரி நியமிக்கப்பட்டார்.

கள்ளக்குறிச்சி: கள்ளச்சாராயம் குடித்து ஐந்து பேர் உயிரிழப்பா? மாவட்ட  ஆட்சியர் சொல்வதென்ன?

விழுப்புரம் மாவட்ட சிபிசிஐடி காவல்துறை மூன்று வழக்கு பதிவு செய்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர்,மதுவிலக்கு ஏடிஜிபி  பணியிடமாற்றம் செய்யபட்டனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உட்பட 9 காவல்துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பாக சென்னை உயர் மன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த ஆணையம் கள்ளசாராயத்தை  தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து அறிக்கை அளக்க அந்த ஆணையத்திடம் கோரப்பட்டுள்ளது. இதுவரை சிபிசிஐடி காவல்துறை 132 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு வாக்கு மூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். சிபிசிஐடியின் 6 குழுக்கள் விசாரித்து வருகின்றது விசாரணை விரிவாகவும் துரிதமாகவும் நடைபெற்று வருகிறது. தமிழக டிஜிபி தலைமையில் அனைத்து உயர்  காவல்துறை அதிகாரிகளும் தொடர்ந்து விசாரணையை கண்காணித்து வருகின்றனர்.

2023 ஆம் ஆண்டு மரக்காணம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய இடங்களில் நடைபெற்ற விஷச் சாராய மரணங்கள் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக விசாரணை நீதிமன்றத்தில் இறுதி அறிக்கையை தாக்கல் செய்துள்ளனர். மரக்காணம் மற்றும் செங்கல்பட்டு சம்பவத்தில் 99 சதவீதம் மெத்தனால் இருந்தது கண்டறியப்பட்டது.  தற்போது கள்ளக்குறிச்சியில் கைபற்றிய விசா சாராயத்தில்  8.6 முதல் 29.7 வரை மெத்தனால் கலந்துள்ளதக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கள்ளக்குறிச்சி சம்பவம்  மரக்காணம் மட்டும் செங்கல்பட்டு சமூகங்களின் தொடர்ச்சி என  சொல்ல முடியாது கள்ளக்குறிச்சி சம்பவம் தனி சம்பவம் கள்ளச்சாராய புகார்கள் தொடர்பாக மாவட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு சிறப்பு வாட்ஸ் அப் குழுக்கள் வழங்கப்பட்டுள்ளன.

கள்ளச்சாராய மரணம்: விசாரணையைத் தொடங்கிய சி.பி.சி.ஐ.டி. போலீசார்

தொழிற்சாலைகளுக்கு வழங்கி வரும் மெத்தனால் கண்காணிக்கபடுவதகவும் கள்ள சாராயத்தை ஒழிப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசு எடுத்து வருகின்றது. திடீர் சோதனைகள் நடத்தி வருவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார். இந்த குற்றங்களில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டத்தில் கைது செய்து வருவதாகவும், மாநில அரசு இந்த சம்பவம் குறித்து கவனமாக விசாரித்து வருகிறது. தற்போது நிலைமை கட்டுக்குள்  வந்துள்ளது. பாதிக்கப்பட்ட நபர்களுக்கு உரிய மருத்துவ உதவிகள் வழங்கி உள்ளதாகவும் அறிக்கையில் தெரிவித்துள்ளார். மாநில காவல் துறை விசாரித்து வரும் வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்ற அவசியம் இல்லை எனவும் சில அரிதான அல்லது விசாரணையில் முன்னேற்றம் இல்லாத வழக்குகளை  மட்டுமே சிபிஐ விசாரணை பேர் முடியும். இந்த வழக்கில் 10 மேற்பட்ட நபர்கள் கைது செய்யபட்டுள்ளனர்.
 விசாரணை சரியான முறையில் விரைவாக நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்

தமிழ்நாடு மதுவிலக்கு  சட்டத்தில் புதிய திருத்தம் கொண்டு வந்திருப்பதாகவும் கள்ளச்சாராய குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு தண்டனை அதிகரித்து இருப்பதாகவும். இந்த சட்டத்தில் ஜாமீன் வழங்குவதற்கு கடுமையான நிபந்தனைகள் கொண்டுவரப்பட்டிருப்பதாகவும் அறிக்கையில் தெரிவித்துள்ளார். தமிழக ஆளுநர் ஒப்புதல் கிடைத்தவுடன் விரைவில் அமலுக்கு வரும் எனவும்  கள்ளச்சாராயத்திற்கு இதுவரை 65 பேர் மரணம் அடைந்துள்ளனர் 145 சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். உரிய முறையில் விசாரணை நடைபெற்று வருவதால் சிபிஐ விசாரணைக்கு மாற்ற தேவையில்லை மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என அந்த அறிக்கையில்  தலைமைச் செயலாளர் தெரிவித்துள்ளார். இந்த வழக்குகள், பொறுப்பு தலைமை நீதிபதி ஆர். மகாதேவன் மற்றும் நீதிபதி முகமது சபீக் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது, தமிழக அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ. ரவீந்திரன்,  வழக்கின் விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஜூலை 11ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.