தவெக நிர்வாகி வீட்டில் மெத். பிடிபட்ட விவகாரம்- அதிர்ச்சி தகவல்
Oct 18, 2026, 11:13 IST1792302200542
தவெக முன்னாள் நிர்வாகி பூபாலன், சுகன், சதீஷ குமார், மணிகண்டன் ஆகியோர் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டனர்.
நாகையில் தவெக நிர்வாகி வீட்டில் 135 கிலோ மெத். பிடிபட்ட விவகாரத்தில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. வட மாநிலங்களில் இருந்து மூலப்பொருட்களை கொண்டு வந்து தமிழகத்தில் தயாரித்தது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. நாகை மட்டுமின்றி மேலும் சில மாவட்டங்கள் வழியாக இலங்கைக்கு கடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கை வழியாக ஐரோப்பா, மத்திய ஆசிய நாடுகளுக்கு மெத். கடத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. விசாரணைக்கு பின் மேலும் பல முக்கிய புள்ளிகள் விரைவில் சிக்குவார்கள் எனக் கூறப்படுகிறது.
நாகை அருகே ரூ.270 கோடி போதைப்பொருள் கடத்தியதாக பிடிபட்ட 4 பேருக்கு வரும் 30 ஆம் தேதி வரை சிறையி அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளர்.

