'ஒரு நாள் முழுவதும் மழை பெய்யும்' என்று வானிலை மையம் எச்சரிக்கை செய்யவில்லை - முதலமைச்சர் ஸ்டாலின்

 
stalin stalin

எப்படி மகளிர் உரிமைத்தொகையை தகுதி உள்ள அனைவருக்கும் வழங்கி வருகிறோமோ, அதேபோல்  மழையால் பாதிக்கப்பட்ட  அனைவருக்கும் நிவாரண நிதி ரூ.6,000 வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

rain

திமுக செயற்குழு உறுப்பினர் இல்ல திருமண விழாவில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் ஸ்டாலின், 47 ஆண்டுகளுக்குப் பிறகு அண்மையில் அதிகளவில் மழை கொட்டித் தீர்த்தது; வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையை விட சென்னையில் காற்று, மழை அதிகம்; மழை குறித்த எச்சரிக்கை செய்தார்கள், இவ்வளவு மழை பெய்யும், ஒரு நாள் முழுவதும் மழை பெய்யும் என்று எச்சரிக்கை செய்யவில்லை. ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்காக பாடுபடக்கூடிய கட்சி திமுக; அதிமுக ஆட்சியில் திட்டமிடாமல் ஏரி திறக்கப்பட்டதால் மோசமான பாதிப்பு ஏற்பட்டது.

stalin

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் செம்பரம்பாக்கம் ஏரியை திறக்க அனுமதி கேட்க அதிகாரிகள் பயந்து காத்திருந்தனர்; திமுக ஆட்சியில் பாகுபாடின்றி அனைவருக்கும் உதவி செய்யப்பட்டது; திட்டமிடப்பட்டு செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்டதால் பெரிய ஆபத்து தவிர்க்கப்பட்டது. பாதிக்கப்பட்ட அனைவருக்கும் 6,000 வழங்கப்படும்; யார் பாதிக்கப் பட்டிருந்தாலும் அவர்களுக்கு நிச்சயமாக, உறுதியாக நிவாரணம் வழங்கப்படும். வெள்ளத்தை மிகச் சரியாக கையாண்டதாக மத்திய அரசின் அதிகாரிகள் மனதார பாராட்டி உள்ளனர் என்றார்.