அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 6 மாத வாரண்டியுடன் சூப்பர் குவாலிட்டி பேக்- ரூ.103.81 கோடியில் மெகா டெண்டர்
தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக வழங்கும் திட்டங்களில் மிக முக்கியமான ஸ்கூல் பேக் திட்டத்தில் 2027-28-ஆம் கல்வி ஆண்டுக்கான மெகா டெண்டரை தமிழ்நாடு பாடநூல் கழகம் அதிரடியாக வெளியிட்டுள்ளது.
மொத்தம் 55,93,170 பள்ளி பைகள் கொள்முதல் செய்யப்பட உள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகள் அனைவருக்கும் இந்த பேக் இலவசமாக கிடைக்கும். டெண்டர் ஆவணத்தில் வெளியிடப்பட்டுள்ள மாடல் படி, பேக் முழுக்க முழுக்க மாணவர்களுக்காகவே வடிவமைக்கப்பட்டுள்ளது. பேக் துணி, தையல், ஜிப், ஸ்ட்ராப் என அனைத்தும் அரசு நிர்ணயித்த தரத்தில் இருக்க வேண்டும். தரத்தில் குறை இருந்தால் நிராகரிக்கப்படும் என அரசு திட்டவட்டமாக கூறியுள்ளது. ஒவ்வொரு பேக்குக்கும் 6 மாத வாரண்டி கட்டாயம். பேக் கிழிந்தாலோ, ஜிப் பழுதானாலோ, ஸ்ட்ராப் அறுந்தாலோ, சப்ளை செய்த நிறுவனமே மாற்றிக் கொடுக்க வேண்டும் என அரசு நிபந்தனை விதித்துள்ளது.
2027-28 கல்வி ஆண்டு தொடங்குவதற்கு முன்பே, பள்ளிகள் திறக்கும் அன்றே ஒவ்வொரு மாணவரின் கையிலும் புது பேக் இருக்க வேண்டும் என்பதற்காக ரூ.103.81 கோடியில் 7 மாதங்களுக்கு முன்பே டெண்டர் விடப்பட்டுள்ளது.
கலர் - நேவி ப்ளூ + ப்ளூ பீடிங் கொண்ட மாடர்ன் லுக்
3 அளவுகள்- சிறியது (Small), நடுத்தரம் (Medium), பெரியது (Large) - வகுப்புக்கு ஏற்ற அளவில்
டாப் ஹேண்டில்- கையில் தூக்க எளிதாக
ZIP பாஸ்ட்னர்- தரமான ஜிப், எளிதில் பழுதாகாது
பிரண்ட் பாக்கெட்- டிபன் பாக்ஸ், பென்சில் பாக்ஸ் வைக்க தனி பாக்கெட்
பீடிங் அவுட்டர்- பேக்கின் வெளிப்புறம் அழகான டிசைன்
உள்ளே லோகோ- பள்ளிக்கல்வித் துறை லோகோ + தமிழக அரசு லோகோ பிரிண்ட் செய்யப்பட்டிருக்கும்

