சென்னையில் கூவம் கரையோரம் ரூ.1000 கோடி மெகா பார்க்- தமிழக அரசு மெகா திட்டம்

 
a

சென்னையின் கூவம் ஆற்றை, தேம்ஸ் நதி போல மாற்ற தமிழக அரசு மெகா திட்டத்தை கையில் எடுத்துள்ளது.

Image

சென்னை மாநகரின் மத்திய பகுதியில் பாயும் முதன்மையான நீர்வழிப்பாதையான கூவம் ஆறு, வரலாற்று ரீதியாக மிக முக்கியமானது. ஆனால் வேகமான நகரமயமாக்கல், ஆக்கிரமிப்பு, கழிவு நீர் கலப்பு, குப்பை குவிப்பு ஆகியவற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டு, சுற்றுச்சூழல் சீர்கேடு அடைந்துள்ளது. இதை சரி செய்ய, *Chennai Rivers Transformation Company Ltd (CRTCL)* நிறுவனம், *TNUIFSL* மூலம் விரிவான திட்ட அறிக்கை (DPR) தயாரிக்க கன்சல்டன்ட் நியமிக்க உள்ளது. மொத்தம் 3 பைலட் ஸ்ட்ரெட்ச் - 3.7 கி.மீ சீரமைக்கப்படவுள்ளது.


1. நேப்பியர் பாலம் முதல் கூவம் ஆற்று முகத்துவாரம் வரை - 0.5 கி.மீ*

2. சுவாமி சிவானந்தா சாலை முதல் பெரியார் பாலம் வரை - 1.2 கி.மீ

3. லிங்க் ரோடு முதல் தாம்ஸ் ரோடு வரை - 2.0 கி.மீ

Image

இந்த 3 இடங்களுக்கும் கான்செப்ட் பிளான் ஏற்கனவே தயாராகி விட்டது. பிளான்டேஷன் (மரம் நடுதல்) திட்டத்தை தவிர, மற்ற அனைத்து வேலைகளுக்கும் DPR தயாரிக்கப்பட உள்ளது. அதாவது, பிளான்டேஷன் வேலையை மட்டும் சென்னை மாநகராட்சி (GCC) ஏற்கனவே டெண்டர் விட்டு விட்டது, 3-வது ஸ்ட்ரெட்சுக்கு விரைவில் டெண்டர் விட உள்ளது. அதாவது, ஆற்றங்கரையை அழகுபடுத்துதல், நடைபாதை, பூங்கா, பொதுமக்கள் வந்து அமரும் இடம், பாரம்பரிய கட்டிடங்களை பாதுகாத்தல், வணிக வளாகங்களை ஒருங்கிணைத்தல் என கூவம் கரையை மக்களுக்கான அழகான, பாதுகாப்பான, சுற்றுச்சூழல் நிறைந்த பொது சொத்தாக மாற்றுவது தான் நோக்கம். இந்த 3.7 கி.மீ வெற்றி பெற்றால், அடுத்து மொத்த கூவம் ஆறும் தேம்ஸ் நதி போல மாறும்.