காங்கிரஸ் வேட்பாளர்களுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!!
தமிழக காங்கிரஸ் கட்சியின் மக்களவைத் தேர்தல் வேட்பாளர்களுடன் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு நடத்தியுள்ளனர்.
மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்ததையொட்டி திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் அவர்களை இன்று சென்னை, அண்ணா அறிவாலயத்தில், தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கு. செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் கட்சியின் சார்பில் மக்களவை தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் திரு. வைத்தியலிங்கம் (புதுச்சேரி), மாணிக்கம் தாகூர், கார்த்திக் சிதம்பரம், எம்.கே. விஷ்ணுபிரசாத், கோபிநாத், செல்வி ஜோதிமணி, விஜய்வசந்த், ராபர்ட் புரூஸ், சசிகாந்த் செந்தில், இ.ஆ.ப., (ஓய்வு), வழக்கறிஞர் திருமதி ஆர். சுதா, விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் திருமதி தாரகை கத்பர்ட் ஆகியோர் சந்தித்துப் பேசினார்கள்.
மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்ததையொட்டி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருமான திரு. மு.க. ஸ்டாலின் அவர்களை இன்று(25.4.2024) சென்னை, அண்ணா அறிவாலயத்தில், தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திரு. கு. செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் கட்சியின் சார்பில் மக்களவை தேர்தலில்… pic.twitter.com/uK6pWoVnUN
— Selvaperunthagai K (@SPK_TNCC) April 25, 2024