ஓபிஎஸ் - ஈபிஎஸ் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் : அதிமுக அலுவலகத்தில் தொண்டர்கள் தர்ணா!

 
eps ops

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தலைமையில்  தொடங்கியது.

ops eps

சென்னை ராயப்பேட்டையில், அதிமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தொடங்கியது. தலைமை அலுவலகத்தில் நடைபெறும் இக்கூட்டத்தில் நகர் பகுதிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. அதிமுக அவைத்தலைவராக இருந்த மதுசூதனன் மறைந்த நிலையில் புதிய அவைத்தலைவரை  இன்று தேர்ந்தெடுக்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. அதிமுக செயற்குழு பொதுக்குழு கூட்டம், உட்கட்சி தேர்தல் நடத்துவது குறித்தும் மாவட்ட செயலாளர்களின் கருத்து கேட்கப்படுகிறது.

ops eps

ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று வரும் நிலையில், அதிமுக தலைமை அலுவலகத்தில் செங்கல்பட்டு மாவட்ட தொண்டர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இலத்தூர் ஒன்றிய  அதிமுகவில் முன்னாள் எம்எல்ஏ மரகதம் குமரவேல் ஆதிக்கம் செலுத்துவதாகவும் , இலத்தூர் அதிமுகவை காப்பாற்ற வேண்டும் என்ற பதாகையுடன் போராட்டம் நடைபெற்று வருகிறது.