மீசைய முறுக்கு 2 திரைப்படம் வெளியாகும் தேதி அறிவிப்பு..!
ஹிப்ஹாப் ஆதி இசையமைத்து, இயக்கி, நடித்து வெளியான படம் "மீசைய முறுக்கு". இந்த படத்தின் மூலம் தான் ஆதி இயக்குனர் மற்றும் நடிகராக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. "மீசைய முறுக்கு" ஹிப் ஹாப் ஆதி வாழ்க்கையில் நடைபெற்ற ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தை மையப்படுத்தி படமாக உருவாக்கி வெற்றி பெற்றவர்.அதனைத் தொடர்ந்து 'நட்பே துணை', 'நான் சிரித்தால்', 'சிவகுமாரின் சபதம்', 'அன்பறிவு' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
சமீபத்தில் மீசைய முறுக்கு படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. முதல் பாகத்தை தயாரித்த சுந்தர். சியின் அவ்னி மூவிஸ் நிறுவனத்துடன் இணைந்து ஹிப்ஹாப் ஆதியும் இந்த பாகத்தை தயாரிக்கிறார்.இந்த படத்தில் அவர் இரட்டை வேடங்களில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
சுந்தர் சி - குஷ்பு தயாரிக்கும் ‘மீசைய முறுக்கு 2’ திரைப்படத்தில் சைத்ரா, கெட்டிகா சர்மா, ரம்யா ரங்கநாதன் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் நாசர், கருணாஸ், ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் இடம்பெற்றுள்ளனர்.
இந்நிலையில், ஹிப்ஹாப் ஆதி நடித்துள்ள ‘மீசைய முறுக்கு 2’ படம் செப்டம்பர் 25ம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது.
No more waiting. No more guessing.
— Avni Cinemax (@AvniCinemax_) July 23, 2026
September 25 🤘#MeesayaMurukku2 is coming to theatres worldwide. Get ready for the celebration. See you all on the big screen🔥#MM2FromSept25 #ConcertInTheatres #HiphopTamizha @hiphoptamizha @RamyaRanganathn @SundarCOffl @khushsundar… pic.twitter.com/etgnRDrn2c

