"தியானம் செய்வது பிரதமரின் தனிப்பட்ட விஷயம்!"- தேர்தல் அலுவலர் விளக்கம்!

 
மோடி தியானம்

தியானம் செய்வது பிரதமரின் தனிப்பட்ட விஷயம் என தேர்தல் அலுவலர் விளக்கம் அளித்துள்ளார்.

Image


மக்களவை தேர்தல் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. வருகிற  ஜூன் 1-ம் தேதி இறுதிக்கட்ட தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் இன்றுடன் நிறைவடைகிறது. ஜூன் 4-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகின்றன. இந்நிலையில்  கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்தில் இன்று தியானம் மேற்கொள்கிறார். 

இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும்போது கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்தில் பிரதமர் மோடியின் தியான நிக்ழச்சியை அனுமதிக்கக்கூடாது என திமுக, சிபிஎம் உள்ளிட்ட கட்சிகள் மாவட்ட தேர்தல் அலுவலரிடம் மனு கொடுத்திருந்தன. இந்நிலையில் இதற்கு விளக்கம் அளித்துள்ள கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் அலுவலரான மாவட்ட ஆட்சியர், பிரதமரின் வருகையும், தியானமும் தனிப்பட்ட நிகழ்வு என்பதால் அதற்கு அனுமதி கோரப்படவில்லை என தெரிவித்திருக்கிறார். மேலும் தேர்தல் நடத்தை விதிகளின் கீழ் பிரதம்ர் மோடியின் தியான நிகழ்ச்சி வராது எனவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.