நாளை இறைச்சி கடைகள் இயங்காது..!

 
1

மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு நகரில் செயல்படும் இறைச்சி விற்பனை மையங்கள் ஒரு நாளுக்கு மூடப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.மத உணர்வுகளை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அரசின் வழிகாட்டுதலின்படி, மார்ச் 31, 2026 (செவ்வாய்க்கிழமை) அன்று இந்த நடைமுறை அமலுக்கு வரும். அன்றைய தினம், பொதுசுகாதாரத் துறையின் கால்நடை மருத்துவப்பிரிவு கண்காணிப்பில் உள்ள அனைத்து இறைச்சிக் கூடங்களும் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.மத நிகழ்வுகளை முன்னிட்டு பொதுமக்களின் உணர்வுகளை மதிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். நகரில் ஒழுங்கையும் சமூக ஒற்றுமையையும் பேணுவதற்கான வழக்கமான நிர்வாக நடைமுறையாகவும் இது கருதப்படுகிறது.

இறைச்சி வியாபாரிகள் உத்தரவை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.இந்த தடையை மீறி விற்பனை செய்யும் கடைகளுக்கு 'சீல்' வைக்கப்படுவதுடன், விற்பனையாளர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.