இன்று இறைச்சி மற்றும் டாஸ்மாக் கடைகள் இயங்காது..!
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அக்டோபர் 2 அன்று தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இறைச்சிக் கடைகள் மற்றும் வதைக்கூடங்கள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது.
மகாத்மா காந்தியின் பிறந்தநாளான அக்டோபர் 2 ஆம் தேதி தேசிய விடுமுறை நாளாகவும், அகிம்சை நாளாகவும் கடைப்பிடிக்கப்படுவதால், ஆண்டுதோறும் இந்தத் தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. இதன்படி, ஆடு, மாடு, கோழி, பன்றி உள்ளிட்ட அனைத்து வகையான இறைச்சி விற்பனைக்கும் தடை அமலில் இருக்கும். இறைச்சி விற்பனை செய்யும் கடைகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய விற்பனை நிலையங்களையும் அன்றைய தினம் திறந்து வைக்கக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், தடையை மீறி இறைச்சி விற்பனை செய்யும் கடைகள் மீது மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க உள்ளனர். விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள இறைச்சி பறிமுதல் செய்யப்படுவதுடன், விதிமீறலில் ஈடுபடும் கடைகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, அக்.2-ந்தேதி அனைத்து பகுதிகளிலும் இறைச்சி விற்பனை செய்யாமல், மாநகராட்சி நிர்வாகத்தின் அறிவுறுத்தலுக்கு ஒத்துழைக்க வேண்டும் என இறைச்சி விற்பனையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் பார்கள் விதிகள் 2003-ன் கீழ் டாஸ்மாக் கடைகள் மற்றும் அவற்றுடன் இணைக்கப்பட்டுள்ள பார்கள் இன்று (வெள்ளிக்கிழமை) மூடவேண்டும்.
அன்றைய தினம் அனைத்து எப்.எல்.1, எப்.எல்.2, எப்.எல்.3, எப்.எல்.3ஏ, எப்.எல்.3 ஏ.ஏ. உரிமையாளர்கள், எப்.எல்.11 உரிமம் பெற்ற கடைகள் மற்றும் பார்கள் ஆகியவை முழுவதுமாக மூடப்படவேண்டும்.
காந்தி ஜெயந்தி அன்று சட்டவிரோதமாக மதுவிற்பனையில் ஈடுபட்டால் விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

