#DuraiVaiko மதிமுகவிற்கு பம்பர சின்னம் - நாளை விசாரணை.
Mar 25, 2024, 13:05 IST1711352121000

ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகத்தில் நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் INDIA கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்திக்கின்றது மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம்.
மதிமுக சார்பில் அக்கட்சியின் முதன்மைச் செயலாளர் துரை வைகோ திருச்சி தொகுதியில் போட்டியிடுகிறார்.

நேற்று கூட்டணி கட்சிகளின் சார்பாக திருச்சியில் நடந்த வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் துரை வைகோ பேசும்பொழுது சின்னம் தொடர்பாக ஒரு திமுக உறுப்பினர் கேள்வி எழுப்பினார்.
அப்பொழுது, "செத்தாலும் எங்கள் சின்னத்தில் தான் நிற்பேன் என்று உணர்ச்சி பொங்க பதில் அளித்தார்.
பம்பரம் சின்னத்தை தங்களுக்கு ஒதுக்கக்கோரி மதிமுக தேர்தல் ஆணையத்தில் ஏற்கனவே கடிதம் அளித்திருந்தது.
இந்நிலையில் மதிமுக அளித்த மனுவை தேர்தல் ஆணையம் உடனடியாக பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ வழக்கு தொடர்ந்திருந்தார். இதனை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தார்.
இந்நிலையில் இதனை அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர்நீதிமன்ற அமர்வு ஒப்புதல் அளித்து நாளை விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.