#MDMK மதிமுக எம்பி மறைவு: எடப்பாடி பழனிச்சாமி இரங்கல்!

 
Edappadi Edappadi
ஈரோடு தொகுதி மதிமுக எம்பி கணேசமூர்த்தியின் மறைவிற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில், "ஈரோடு தொகுதி மக்களவை உறுப்பினரும் மதிமுகவின் மூத்த தலைவருமான 
திரு. அ. கணேசமூர்த்தி அவர்கள் உயிரிழந்த செய்திகேட்டு துயருற்றேன்.

 

அன்னாரை இழந்துவாடும் அவரது குடும்பத்தாருக்கும், மதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். மறைந்த திரு. அ.கணேசமூர்த்தி அவர்களின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்." என்று தனது இரங்கலை தெரிவித்து பதிவிட்டுள்ளார்.