ஆளுநர் உரைக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பாராட்டு..!
"சாதி, மத வேறுபாடுகளைக் கடந்து, பண பலத்தை முறியடித்து தமிழக வெற்றிக் கழகத்திற்கு மக்கள் ஆதரவளித்துள்ளனர் என்ற ஆளுநரின் கூற்று உண்மையே" என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பாராட்டியுள்ளார். மேலும், 2031 இல் இந்தியாவின் முன்மாதிரி மாநிலமாக மாற்றுவதற்கு “வெற்றி தமிழகம்“என்ற பெயரில் தொலைநோக்கு திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்ற அறிவிப்பு , ஜோசப் விஜய் அரசின் சிறந்த தொலைநோக்கு பார்வையை காட்டுவதாகவும் அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.
“`வெற்றி தமிழகம்'என்ற பெயரில் தொலைநோக்கு திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்ற அறிவிப்பு பாராட்டத்தக்கது. சமூக நீதியை நிலைநாட்டவும், மாநில உரிமைகளுக்காக ஓங்கி குரல் கொடுக்கவும், நதிநீர் உரிமைகளைப் பாதுகாக்கவும் தவெக அரசு தொடர்ந்து பாடுபடும் என்று ஆளுநர் உரையில் அழுத்தம் திருத்தமாகக் கூறப்பட்டிருப்பது மிகவும் பாராட்டத்தக்கது.
தமிழ்நாட்டின் அடையாளமான இருமொழிக் கொள்கை (தமிழ் மற்றும் ஆங்கிலம்) தொடர்ந்து நீடிக்கும் என்ற அரசின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது.
முதலமைச்சர் விஜய்யின் இந்த புதிய உத்திகளையும், ஆளுநர் உரையின் கொள்கைகளையும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மனதார பாராட்டியிருப்பது அரசியல் வட்டாரத்தில் கவனிப்பை பெற்றுள்ளது.

