"ஸ்டாலின் மிசா கைது 100% அரசியல் காரணத்திற்காக இல்லை!" - எம்பி துரை வைகோ பேட்டி

 
"ஸ்டாலின் மிசா கைது 100% அரசியல் காரணத்திற்காக இல்லை!" - எம்பி துரை வைகோ பேட்டி

மிசா காலத்தில் ஸ்டாலின் கைது செய்யப்பட்டார் என்பது உண்மைதான். ஆனால் எதற்காக கைது செய்யப்பட்டார் என்பது கேள்விக்குறி தான் என மதிமுக எம்.பி. துரை வைகோ கூறியுள்ளார்.


திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய துரை வைகோ எம்பி, “ஸ்டாலின் மிசா காலத்தில் அரசியல் காரணத்திகாக தான் கைதானார் என்று சொன்னால் 100% இல்லை. மிசா காலத்தில் அரசியல் காரணங்களுக்காக ஸ்டாலின் கைது செய்யப்பட்டாரா என்பது கேள்விக்குறிதான். மிசா சட்டத்தில் அரசியல் காரணங்கள் மட்டுமின்றி பிற காரணங்களுக்காகவும் பலர் கைது செய்யப்பட்டனர். மிசாவின்போது ஸ்டாலின் கைதானது உண்மை. ஆனால் முழுமையான அரசியல் காரணத்துக்காக இல்லை. மிசா காலத்தில் திமுகவில் முதல் கைதும் வைகோதான். கடைசி விடுதலையும் வைகோதான். அரசியல் நாகரிகம் கருதி இந்த விவகாரத்தில் நான் இதற்கு மேல் பேச விரும்பவில்லை. திமுக கூட்டணியில் திருமாவுக்கு நடந்தது தான் எங்களுக்கும் இடதுசாரிகளுக்கும் நடந்தது. ஸ்டாலினை பிரதமர் என்று திமுக-வினர் சொன்னபோது ஏன் யாரும் விமர்சிக்கவில்லை.

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும். திருச்சியை தமிழ்நாட்டின் 2ஆவது தலைநகராக அறிவிக்க முதல்வரிடம் ஏற்கெனவே வலியுறுத்தினேன். இதுவே முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் கனவு. பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் வந்தால் மீனவ மக்கள் பாதிக்கப்படுவர். சென்னையில் போக்குவரத்து மற்றும் மக்கள் நெருக்கடி அதிகரித்துவிட்டது. தமிழ்நாட்டின் எந்தப் பகுதியில் இருந்தும் திருச்சிக்கு 3 மணி நேரத்தில் வந்துவிடலாம்” என்றார்.