"தொகுதிக்கு ரூ .20 கோடி வரை செலவு செய்தும் திமுக தோற்றதுவிட்டது"- துரை வைகோ

 
s

தி.மு.க - அ.தி.மு.க கூட்டணி வைக்க முயன்றதால் தான் எம்.எல்.ஏக்கள் த.வெ.க பக்கம் போய்ட்டார்கள் என மதிமுக எம்பி துரை வைகோ கூறியுள்ளார்.

திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக எம்பி துரை வைகோ, “முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு எம்எல்ஏக்களை களவாட வேண்டிய அவசியமில்லை. திமுக, அதிமுக கூட்டணி முயற்சியால் தான் எம்எல்ஏக்கள், அதிமுக முக்கிய நிர்வாகிகள் ராஜினாமா செய்கிறார்கள். திமுக, அதிமுக தலைமை மீதான நம்பிக்கையின்மையால் தான் கட்சியிலிருந்து வெளியேறுகின்றனர். தி.மு.க - அ.தி.மு.க கூட்டணி வைக்க முயன்றதால் தான் எம்.எல்.ஏக்கள் த.வெ.க பக்கம் போய்ட்டார்கள். திமுகவுடன் ரகசிய கூட்டணி, அதனால்தான் அதிமுக எம்எல்ஏக்கள் பதவி விலகின.


எம்.எல்.ஏக்களை களவாடுவது த.வெ.கவா? தி.மு.கவா? பணம் கொடுக்காம த.வெ.க ஜெயிச்சிருக்காங்க, தி.மு.க அவ்ளோ செலவு செய்தும் தோத்துட்டாங்க... சட்டப்பேரவைத் தேர்தலில் தொகுதிக்கு ரூ .20 கோடி வரை செலவு செய்தும் திமுக தோற்றதுவிட்டது. திமுக முன்னாள் அமைச்சர்களின் தொகுதிகளில் ரூ.80 கோடி முதல் ரூ.100 கோடி வரை செலவு செய்யப்பட்டது. பல ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்தும் திமுகவால் வெற்றிபெற முடியவில்லை. குதிரைப் பேரம் செய்வது திமுகதான். மதிமுக எம்எல்ஏக்களை திமுக விலைக்கு வாங்கிவிட்டது. திமுக - தவெக ஒரே அணியில் இணைவது ஏற்புடையதல்ல. தவெக தனது கொள்கை எதிரி பாஜக தான் என வெளிப்படையாக அறிவித்து விட்டது. பாஜக - அதிமுக கூட்டணியுடன் இணைந்து ஆட்சியமைக்க முற்பட்ட திமுக எப்படி பாஜகவை எதிர்க்கும்” என்றார்.