தொகுதிப் பங்கீடு பேச்சுக்கு மதிமுக குழு அமைப்பு!!

 
vaiko ttn

தொகுதி உடன்பாடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த மதிமுக குழு அமைத்துள்ளது.

இதுதொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் நாடாளுமன்றத் தேர்தல் தொகுதி உடன் பாடு குறித்துப் பேச்சுவார்த்தை நடத்த மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் கீழ்காணுமாறு பேச்சுவார்த்தைக் குழு அமைக்கப்படுகிறது.

vaiko

1. ஆடிட்டர் ஆ.அர்ஜூனராஜ் -கழக அவைத் தலைவர்
2. மு.செந்திலதிபன் -கழகப் பொருளாளர்
3. ஆவடி இரா.அந்திரிதாஸ் -அரசியல் ஆய்வு மைய செயலாளர்
4. வி.சேஷன் -தேர்தல் பணிச் செயலாளர்மறுமலர்ச்சி திமுக சார்பில் தேர்தல் அறிக்கைத் தயாரிப்புக் குழு கீழ்கண்டவாறு அறிவிக்கப்படுகிறது.

vaiko mk stalin

1. தி.மு.இராசேந்திரன் -கழகத் துணைப் பொதுச்செயலாளர்
2. ஆ.வந்தியத்தேவன் -கழக கொள்கை விளக்க அணி செயலாளர்
3. வழக்கறிஞர் இரா.செந்தில்செல்வன் -கழக தணிக்கைக் குழு உறுப்பினர்
4. ப.த.ஆசைத்தம்பி - கழக இளைஞரணி செயலாளர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.