"34 ஆண்டு கனவு சார்"- 51 வயதில் கிடைத்த MBBS சீட்
51 வயதில் நீட் தேர்வில் வெற்றி பெற்று, 34 ஆண்டுகளுக்குப் பிறகு சிறப்புப் பிரிவின் மூலம் மருத்துவக் கனவை நனவாக்கியுள்ளார் நாகப்பட்டினம் சுரேஷ்குமார்.

1992-ல் 12ஆம் வகுப்பு முடித்த நாகர்கோவில் சுரேஷ்குமார், 34 ஆண்டுகளுக்குப் பிறகு தனது மருத்துவர் கனவை NEET மூலம் நனவாக்கியுள்ளார். வயது தடையை தாண்டி 2026 NEET தேர்வில் வெற்றி பெற்று, சிறப்பு ஒதுக்கீட்டின் மூலம் மருத்துவம் படிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் நடைபெற்ற நேரடி கலந்தாய்வில் மாணவர்களுடன் சுரேஷ்குமாரும் கலந்துகொண்டார். மருத்துவ சேர்க்கை கலந்தாய்வில் பங்கேற்ற 51 வயதாகும் சுரேஷ் குமார் என்பவருக்கு மாற்றுத்திறனாளிகள் ஒதுக்கீட்டின் கீழ் நாகை அரசு மருத்துவக் கல்லூரியில் சீட் கிடைத்துள்ளது.
இதுகுறித்து சுரேஷ் குமார் கூறுகையில், “சிறுவயதில் இருந்தே மருத்துவ துறையின் மீது இருந்த தீரா காதல்... 51 வயதில் நீட் எழுதி வெற்றி... ஸ்பெஷல் கோட்டாவில் மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.கல்லூரியில் 20 வயது மாணவர்களுடன் அமர்ந்து என்னாலும் ஜாலியாக படிக்க முடியும்..” என்றார்.

