MBBS படிப்பு - தரவரிசை பட்டியல் வெளியீடு

 
MBBS படிப்பு - தரவரிசை பட்டியல் வெளியீடு

மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தரவரிசை பட்டியல் வெளியானது.

MBBS, BDS படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை அமைச்சர் அருண்ராஜ் வெளியிட்டார். MBBS படிப்புக்கு இந்தாண்டு 9,999 இடங்களை கலந்தாய்வு மூலம் நிரப்ப உள்ளோம். 7.5% இட ஒதுக்கீட்டில் 537 MBBS இடங்களில் அரசு மாணவர்கள் பயில உள்ளன. மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தரவரிசை பட்டியலில் விழுப்புரத்தைச் சேர்ந்த வெங்கடபதி வேலாயுதம் என்ற மாணவர் 705 மதிப்பெண்களுடன் முதலிடம் பிடித்துள்ளார். புதுக்கோட்டை மாணவி ஸ்ரீநிகா இரண்டாம் இடம் (700), விருதுநகர் மாணவர் சுடர் மூன்றாம் இடம் (696) பிடித்துள்ளார். சென்னை மாணவி வனிஷா சதீஷ் நான்காம் இடமும் (695), ஈரோடு மாணவர் சபரி ஐந்தாம் இடமும் (695) பிடித்துள்ளனர். 7.5% ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பித்த மாணவர்கள் தரவரிசையில் நாகையைச் சேர்ந்த தினேஷ் என்ற மாணவர் முதலிடம் பிடித்துள்ளார். இதேபோல் பிஎஸ்சி நர்சிங், பி.பார்ம் உள்ளிட்ட 19 இணை மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலும் வெளியிடப்பட்டது.

அரசு ஒதுக்கீட்டில் பெறப்பட்ட விண்ணப்பங்கள் 41,726. அதில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விண்ணப்பங்கள் 35,926. நிா்வாக இடங்களுக்கு பெறப்பட்ட விண்ணப்பங்கள் 30,907. அதில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விண்ணப்பங்கள் 26,956. 7.5% ஒதுக்கீட்டிற்கு பெறப்பட்ட விண்ணப்பங்கள் 4,860: அதில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விண்ணப்பங்கள் 3,625 என அமைச்சா் அருண்ராஜ் கூறினார்.