வாட்ஸ் அப் மூலம் மர்ம நபர் தொடர்ந்து தொல்லை- மேயர் பிரியா பரபரப்பு புகார்
Jul 27, 2026, 15:50 IST1785147650350
அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தனக்கு தொடர்ந்து தொல்லை கொடுப்பதாக காவல் ஆணையகரத்தில் மேயர் பிரியா புகார் அளித்துள்ளார்.
சென்னை மாநகராட்சி மேயர் பிரியாவுக்கு அடையாளம் தெரியாத மர்மநபர் வாட்ஸ் அப் மற்றும் சமூக வலைதளங்களில் தொடர்ந்து தொல்லை அளிப்பதாக காவல் ஆணையகரத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து சமூக வலைதளங்களில் தன்னை ்ற்றி அவதூறாக பேசுவதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் காவல் ஆணையர் அலுவலகத்தில் மேயர் பிரியா புகார் அளித்துள்ளார். மேயர் பிரியாவின் புகாரை அடுத்து சென்னை காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டுவருகிறது.

