இருவர் கொலை! தொடர்புடைய 3 பேரின் வீடுகள் சூறை!

 
Mayiladuthurai

இளைஞர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் வீடுகள் சூறையாடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மயிலாடுதுறை அருகே முட்டம் கிராமத்தில் சாராய வியாபாரிகள் ராஜ்குமார், தங்கதுரை, மூவேந்தன் உள்ளிட்டோர் சாராய விற்பனை செய்து வந்துள்ளனர். இதனை கல்லூரி மாணவர் ஹரிசக்தி மற்றும் அவரது நண்பர் ஹரிஷ் ஆகிய இருவரும் தட்டிக்கேட்டதாக கூறப்படுகிறது. மேலும் சாராய விற்பனை தொடர்பாக அந்த இளைஞர்கள் காவல் நிலையத்திலும் தகவல் தெரிவித்ததாக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த சாராய வியாபாரிகள் இரண்டு இளைஞர்களையும் கொலை செய்ததாக தகவல் வெளியானது. ராஜ்குமார், தங்கதுரை கைது செய்யப்பட்ட நிலையில் மூவேந்தனை போலீசார் தேடி வருகின்றனர்.இருவர் கொலை செய்யப்பட்ட விவகாரத்திற்கு சாராய விற்பனை காரணம் அல்ல எனவும், முன்விரோதம் தான் காரணம் எனவும் மாவட்ட காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. இருதரப்பிற்கும் இடையே ஏற்கெனவே முன்விரோதம் இருந்து வந்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இளைஞர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் வீடுகள் சூறையாடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கல்லூரி மாணவர் உட்பட 2 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய ராஜ்குமார், தங்கதுரை, மூவேந்தன் ஆகிய 3 பேரின் வீடுகளை பொதுமக்கள் சூறையாடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.