மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மாற்றம்

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதியை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அனைத்து மகளிர் காவல்நிலையம் எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளியின் மூன்றரை வயது மகள் அருகில் உள்ள அங்கன்வாடியில் பயின்று வந்த நிலையில், மதியம் உணவு இடைவேளையின் போது கை கழுவுவதற்காக வெளியே சென்ற குழந்தைக்கு அதே பகுதியை சேர்ந்த 17 வயது இளைஞர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அப்போது குழந்தை அலறியதால் செங்கல்லை எடுத்து தலையில் தாக்கியதில் குழந்தைக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
சீர்காழியில், மூன்றரை வயது குழந்தை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் குறித்து மயிலாடுதுறை ஆட்சியர், அந்தக் குழந்தையின் மீதும் தவறு இருக்கிறது என்று முற்றிலும் பொறுப்பற்ற முறையில் கூறியிருக்கிறார். அவருக்கு, @BJP4Tamilnadu சார்பில் வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக்… pic.twitter.com/OxoZTiEyC4
— K.Annamalai (@annamalai_k) February 28, 2025
இந்நிலையில் சீர்காழியில் மூன்றரை வயது குழந்தை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் குறித்து மயிலாடுதுறை ஆட்சியர் மகாபாரதி, அந்தக் குழந்தையின் மீதும் தவறு இருக்கிறது. குழந்தை தவறாக நடந்ததும் பாலியல் துன்புறுத்தல் முயற்சிக்கு காரணம் எனக் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதியை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மயிலாடுதுறையின் புதிய மாவட்ட ஆட்சியராக ஶ்ரீகாந்த் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.