மயிலாடுதுறை காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பு..!

 
1

 தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி 9 தொகுதிகளில் போட்டியிடுகிறது. புதுச்சேரியிலும் காங்கிரஸ் கட்சியே போட்டியிடுகிறது.

தமிழ்நாட்டில், திருவள்ளூர் (தனி) தொகுதியில் சசிகாந்த் செந்தில், கிருஷ்ணகிரியில் கே. கோபிநாத், கரூர் தொகுதியில் ஜோதிமணி, கடலூர் தொகுதியில்  எம்.கே. விஷ்னு பிரசாத், சிவகங்கையில் கார்த்தி சிதம்பரம், விருதுநகர் தொகுதியில் மாணிக்கம் தாகூர், கன்னியாகுமரியில் விஜய் வசந்த், திருநெல்வேலியில்  ராபர்ட் ப்ரூஸ் போட்டியிடவுள்ளனர்.

அதேபோல விளவங்கோடு சட்டசபை இடைத் தேர்தலில் டாக்டர் தாரகை போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் மயிலாடுதுறை தொகுதி வேட்பாளர் பெயர் மட்டும் அறிவிக்கப்படாமல் இருந்தது. அந்த தொகுதிக்கு வேட்பாளராக போட்டியிட கடும் போட்டி நிலவி வந்தது. முன்னாள் மத்திய அமைச்சர்களான திருநாவுக்கரசர், மணிசங்கர் ஐயர் உள்ளிட்டோரின் பெயர்கள் அடிபட்டனர். இந்த நிலையில் நேற்றிரவு வேட்பு மனு தாக்கல் நிறைவடைய உள்ள சூழலில் இன்று இரவு மயிலாடுதுறை வேட்பாளரை காங்கிரஸ் மேலிடம் அறிவித்தது.

அதன்படி  ஆர் சுதா வேட்பாளராக போட்டியிடுகிறார்.  வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளான இன்று ஆர்.சுதா தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்யவுள்ளார்.

காங்கிரஸ் வேட்பாளர்கள் 10 பேரில் 2 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல விளவங்கோட்டிலும் பெண்ணையே வேட்பாளராக நிறுத்தியுள்ளது காங்கிரஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

1