சாராய விற்பனையை தட்டிக்கேட்ட 2 கல்லூரி மாணவர்கள் படுகொலை!

மயிலாடுதுறை அருகே சாராய விற்பனையை தட்டிக்கேட்ட 2 இளைஞர்கள் சாராய வியாபாரிகளால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை அருகே முட்டம் கிராமத்தில் சாராய வியாபாரிகள் ராஜ்குமார், தங்கதுரை, மூவேந்தன் உள்ளிட்டோர் சாராய விற்பனை செய்து வந்துள்ளனர். இதனை கல்லூரி மாணவர் ஹரிசக்தி மற்றும் அவரது நண்பர் ஹரிஷ் ஆகிய இருவரும் தட்டிக்கேட்டதாக கூறப்படுகிறது. மேலும் சாராய விற்பனை தொடர்பாக அந்த இளைஞர்கள் காவல் நிலையத்திலும் தகவல் தெரிவித்ததாக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த சாராய வியாபாரிகள் இரண்டு இளைஞர்களையும் தீட்டுகட்ட முடிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில், சாராய விற்பனையை தட்டிக்கேட்ட கல்லூரி மாணவன் ஹரிசக்தி மற்றும் இளைஞர் ஹரிஷ் ஆகிய இருவரும் சாராய வியாபாரிகளால் படுகொலை செய்யப்பட்டனர். சாராய வியாபாரி ராஜ்குமார், தங்கதுரை கைது செய்யப்பட்ட நிலையில் மூவேந்தனை போலீசார் தேடி வருகின்றனர். 2 இளைஞர்கள் சாராய வியாபாரிகளால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.