இறந்த மனைவியின் மடி மீது தலை வைத்து தீக்குளித்த கணவன்!

மயிலாடுதுறை அருகே இறந்த மனைவியின் மடி மீது தலை வைத்து கணவன் தீக்குளித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறையை சேர்ந்தவர் சித்த மருத்துவர் இளங்கோவன். இவரது மனைவி கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த நிலையில், மனைவியின் இழப்பை தாங்க முடியாத இளங்கோவன் தானும் மனைவியுடன் சேர்ந்த சாக முடிவு செய்துள்ளார். தனது உடல் முழுவதும் பெட்ரோல் ஊற்றி பின் தனது மனைவியின் மடி மீது தலைவைத்து படுத்தவாறு தீக்குளித்துள்ளார். இதனால் அவர் சூடு தாங்காமல் அலறி துடித்த நிலையில், அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டனர். மனைவி மீது கொண்ட தீரா காதலால் சித்த மருத்துவர் இளங்கோவன் தீக்குளித்துள்ளார்.
தீக்காயங்களுடன் உயிருக்கு போராடியவரை திருவாரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். 90 சதவீதம் தீக்காயம் ஏற்பட்டுள்ளதால் அவர் ஆபத்தான நிலையில், உயிருக்கு போராடிக்கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், சம்பவ இடத்தில் மயிலாடுதுறை காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார்.