சென்னை வந்தடைந்தார் மாயாவதி !

 
ARMSTRONG

ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்த பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி சென்னை வந்தடைந்தார்.

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். பெரம்பூரில் வீட்டின் அருகே இரு சக்கர வாகனத்தில் சென்றுக்கொண்டிருக்கும்போது அவரை பின் தொடர்ந்த, 6  பேர் கொண்ட மர்ம நபர்கள் சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதில் படுகாயமடைந்த பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங்கை, அக்கம்பக்கத்தினர் மீட்டு சென்னை கிரீம்ஸ் சாலை அப்போலோ மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

படுகொலை செய்யப்பட்டு உயிரிழந்த ஆம்ஸ்ட்ராங்கின் உடல் இன்று இறுதி மரியாதையுடன் உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்கு வசதியாக அவரின் உடல் பெரம்பூர் மாநகராட்சி பள்ளியில் வைக்கப்பட்டுள்ளது.

அவரது உடலுக்கு பொதுமக்களும், பிரபல அரசியல் கட்சித் தலைவர்களும், திரை பிரபலங்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

 இந்நிலையில் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி, அவரது அரசியல் வாரிசான ஆகாஷ் ஆனந்துடன் சென்னை வந்தடைந்தார்.