"நமது நாடு தொடர்ந்து முன்னேறி, உலகத்தை வழி நடத்தும் ஒளிவிளக்காகத் திகழட்டும்"- அண்ணாமலை வாழ்த்து!

 
Annamalai

நாட்டின் 75ஆவது குடியரசு தினத்தையொட்டி அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார். 

National Flag

இந்நிலையில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது சமூகவலைத்தள பக்கத்தில், அனைவருக்கும் சம உரிமை, சம நீதி, ஏற்றத் தாழ்வற்ற சமூகம் போன்ற உயரிய கோட்பாடுகளைக் கொண்ட, பாரதத்தின்  அரசியலமைப்புச் சாசனம் நடைமுறைக்கு வந்த இந்த நன்னாளில், அனைவருக்கும் இனிய குடியரசு தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


 

மகத்தான பாரம்பரியமும் வரலாறும் கொண்ட தேசத்தில் பிறந்தோம் என்பதில் பெருமிதம் கொள்வோம். மக்களாட்சி மலரப் பாடுபட்ட அனைவரின் ஈடு இணையற்ற தியாகங்களை போற்றி வணங்குவோம். நமது நாடு தொடர்ந்து முன்னேறி, உலகத்தை வழி நடத்தும் ஒளிவிளக்காகத் திகழட்டும். என்று குறிப்பிட்டுள்ளார்.