தொழிலாளர்களையும், அவர்களின் உழைப்பையும் போற்றி மகிழ்வோம் - தினகரன் வாழ்த்து!!

 
ttv

உழைக்கும் மக்களின் மேன்மையை உலகிற்கு பறைசாற்றும் வகையில் உழைப்பாளர்கள் தினத்தை உரிமையோடு கொண்டாடி மகிழும் அனைவருக்கும் எனது மனமார்ந்த மே தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தினகரன் கூறியுள்ளார். 

tn

இதுதொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், உடல் உழைப்பை மட்டுமே மூலதனமாக கொண்டு மானுட நாகரீகத்தின் வளர்ச்சிக்காக மாபெரும் பங்காற்றிய முன்னோர்கள், தங்களின் அடிமைத் தனத்தை உடைத்தெறிந்து, ஒற்றுமையுடன் போராடி அவர்களின் உரிமைகளை
வென்றெடுத்த நாளே மே தினம் எனும் உழைப்பாளர் திருநாளாகும். ”செய்யும் தொழிலே தெய்வம்” என்ற பழமொழிக்கு ஏற்ப நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், அன்றாட வாழ்வியலில் சமூக இயக்கத்திற்கும் உறுதுணையாக இருக்கும் தொழிலாளர்களையும், அவர்களின் உழைப்பையும் மே தின நன்னாளில் போற்றி மகிழ்வோம்.

TTV

“உழைப்பே உயர்வை தரும்… உழைப்பால் கிடைக்கும் பயனே மனநிறைவை தரும்” என்ற நம்பிக்கையோடு கடினமாக உழைத்துக் கொண்டிருக்கும் தொழிலாளர்கள் அனைவருக்கும் வெற்றி நிச்சயம் எனக்கூறிக் கொண்டு உழைப்பாளர்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது இதயம் கனிந்த மே தின நல்வாழ்த்துக்களை உரித்தாக்கிக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.