மே தினத்தையொட்டி தினகரன் வைத்த முக்கிய கோரிக்கை!!

 
ttv dhinakaran

தமிழகம் முழுவதும் அனைத்து வருவாய் மாவட்ட தலைநகரங்களில் மே தின பொதுக்கூட்டங்கள் நடத்த கோரி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

ttv

இதுதொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், உழைக்கும் வர்க்கத்தினர் ஒன்று கூடி போராடி தங்களின் உரிமையை பெற்ற திருநாள், உழைப்பவரே உயர்ந்தவர் என்பதை உலகிற்கு உரக்கச் சொல்லும் நாளான மே தினத்தன்று (01.05.2024) கழகத்தின் சார்பில் அனைத்து வருவாய் மாவட்ட தலைநகரங்களிலும் மே தின பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ளன. வருவாய் மாவட்ட தலைநகரங்களில் நடக்கவிருக்கும் இப்பொதுக்கூட்டங்களை மாவட்டக் கழக செயலாளர்களுடன் இணைந்து இதயதெய்வம் அம்மா தொழிற்சங்கப் பேரவை நிர்வாகிகள் சிறப்பாக ஏற்பாடு செய்து, முன்னெடுத்து நடத்திட வேண்டும்.

TTV Dhinakaran

இக்கூட்டங்களுக்கு அந்தந்த வருவாய் மாவட்டங்களுக்குட்பட்ட தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டக் கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், மாநில மற்றும் மாவட்ட சார்பு அணிகளின் நிர்வாகிகள், பகுதி, ஒன்றிய, நகர, பேரூர் கழகம் மற்றும் சார்பு அணிகளின் நிர்வாகிகள், தலைமைக் கழக பேச்சாளர்கள், ஊராட்சிக் கழக செயலாளர்கள், வட்ட/வார்டு/கிளைக் கழக நிர்வாகிகள், கழக தொண்டர்கள் என அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண்டு, உழைக்கும் தொழிலாளர் வர்க்கத்திற்கு பெருமை சேர்த்திட இந்த மே தின பொதுக்கூட்டங்களை எழுச்சியோடு நடத்திட வேண்டுமெனக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.