தங்கம் வாங்க உடனே கிளம்புங்க.... சவரன் ரூ. 38 ஆயிரத்திற்கும் கீழ் சரிவு..

 
தங்கம் வாங்க உடனே கிளம்புங்க.... சவரன் ரூ. 38 ஆயிரத்திற்கும் கீழ் சரிவு..

சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு மேலும் ரூ 144 குறைந்து, ஒரு சவரன் 38 ஆயிரத்திற்கும் கீழ் சரிந்துள்ளது.  

தங்கம் விலை சரிவு

சென்னையில் கடந்த  வார இறுதியில் ( மே 7 ஆம் தேதி)  தங்கம் விலை அதிரடியாக  39, ஆயிரத்தை தாண்டி விற்பனையானது .  அன்றைய தினம் ஒரு கிராம் ரூ.4,877க்கும்,   ஒரு சவரன்  ரூ. 39,016  க்கும்  விற்பனையானது.  அதன்பிறகு இந்த வாரம் தொடர்ந்து குறைந்துவந்த தங்கம்,  கடந்த புதன்கிழமை அன்றுகூட  சவரனுக்கு ரூ.  ரூ. 472  குறைந்து,  ஒரு பவுன் ரூ. 38,296 க்கு விற்பனை செய்யப்பட்டது. பின்னர் வியாழன் அன்று எதிர்பாராத விதமாக ஆபரணத் தங்கம் விலை திடீரென ரூ. 270 அதிகரித்து,  ரூ. 38,680 க்கு  விற்கப்பனையானது.  

சென்னையில் தங்கம் விலை அதிரடி உயர்வு... சவரன் ரூ.39 ஆயிரத்தை தாண்டி  விற்பனை..

ஆனால் நேற்றைய தினம் தங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு 544 ரூபாய் சரிந்து,  ஒரு கிராம் ரூ.4,755-க்கும், ஒரு சவரன் ரூ.38,040க்கும் விற்பனை செய்யப்பட்டது.  இந்நிலையில் இன்று இல்லத்தரசிகளை மகிழ்விக்கும் விதமாக இன்றும் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 144 குறைந்திருக்கிறது.  அதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை  கிராமுக்கு 18 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் ரூ.4,737-க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன்   ரூ.37,896-க்கு விற்பனை செய்யப்படுகிறது.  

நேற்றைய தினம் 63 ரூபாய் 40 காசுகளுக்கு விற்பனையான வெள்ளி விலை இன்று 30 காசுகள் உயர்ந்திருக்கிறது.  சென்னையில் இன்று சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை ரூ. 63.70 க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.63 ஆயிரத்து 700 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.