மீண்டும் உயர்ந்தது தங்கத்தின் விலை

 
gold

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.80 உயர்ந்துள்ளது.

gold

தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற,  இறக்கங்களை சந்தித்து வரும் நிலையில் கடந்த வாரம் ரூ. 46 ஆயிரத்தை தாண்டி விற்பனையானது.  இதனால் சாமானியர்கள் அதிர்ச்சியடைந்த நிலையில் நேற்றைய நிலவரப்படி 22  காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 37 ரூபாய் குறைந்தது . இதன் மூலம் ஒரு கிராம் தங்கத்தின் விலை 5705 ஆகவும் , சவரனுக்கு ரூபாய் 296 குறைந்து 45 ஆயிரத்து 640 ஆகவும்  தங்கம் விற்பனை செய்யப்பட்டது.

gold

இந்நிலையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 அதிகரித்து 5,715 ரூபாய் ஆக அதிகரித்துள்ளது. இதனால் சவரனுக்கு ரூ.80 அதிகரித்து ரூ.45,720 ஆக விற்பனையாகிறது. வெள்ளி விலையை பொறுத்தவரையில்  நேற்றைய விலையில் மாற்றம் இல்லாமல் ஒரு கிராம் வெள்ளி ரூ.78.50 எனவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.78,500 எனவும் விற்பனையாகிறது.