சென்னை- கொல்கத்தா அணிகள் மோதும் போட்டி : சேப்பாக்கம் மைதானத்தில் டிக்கெட் விற்பனை விறுவிறுப்பு..

 
சென்னை- கொல்கத்தா அணிகள் மோதும் போட்டி :  சேப்பாக்கம் மைதானத்தில் டிக்கெட் விற்பனை விறுவிறுப்பு..

சென்னை- கொல்கத்தா அணிகள் மோதும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை, சேப்பாக்கம் மைதானத்தில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கியுள்ளது.   டிக்கெட் வாங்குவதற்காக ஏராளமான ரசிகர்கள் இரவு முழுவதும் காத்திருக்கின்றனர்.

16-வது ஐ.பி.எல். சீசன் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 31-ந்தேதி கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது.  இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்று வரும் நிலையில், ஒவ்வொரு அணிகளும் தங்களது சொந்த ஊர்களில் 7 ஆட்டங்கள் ஆட முடிவு செய்யப்பட்டது.  அதன்படி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் 7 ஐ.பி.எல். ஆட்டங்கள் நடைபெறுகிறது. ஏற்கனவே 6 ஆட்டங்கள் முடிந்த நிலையில்,  வருகிற 14-ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில்  நடைபெறும்  கடைசி ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை, கொல்கத்தா அணிகள் மோதுகின்றன.

சென்னை - டெல்லி மோதும் ஐபிஎல் போட்டி.. டிக்கெட் வாங்க குவிந்த ரசிகர்கள்..
 
இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்கும் நிலையில், டிக்கெட் வாங்குவதற்காக நேற்று இரவு முதலே ஆயிரக்கணக்கான ரசிகர்கள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தின் வெளியே காத்துக்கிடக்கின்றனர். தொடர்ந்து ரசிகர்கள் வந்த வண்ணம் இருப்பதால் கூட்ட நெரிசலை தவிர்க்க போலீசார் தடுப்புகளை வைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கடும் கட்டுப்பாடுகளுடன்  பொதுமக்க நீண்ட வரிசையில் காத்திருந்து டிக்கெட்டுகளை வாங்கிச் செல்கின்றனர்.   ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட்டுகள், ரூ. 1,500  முதல் ரூ.5000 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நேரடி மற்றும் ஆன்லைன் மூலம் காலை 9.30 மணி முதல் டிக்கெட் விற்பனை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.