திருச்சூர் ரயில் நிலையத்தில் பயங்கர தீ விபத்து

 
ச் ச்

கேரள மாநிலம் திரிச்சூர் ரயில் நிலையத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் சுமார் 600 இருசக்கர வாகனங்கள் சேதமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கேரள மாநிலம் திருச்சூர் ரயில் நிலையத்தில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 600 இரு சக்கர வாகனங்கள் எரிந்து நாசமாகின. சோதனை ஓட்டத்திற்கு செல்லக்கூடிய ரயில் என்ஜினும் தீக்கிரையானது. இரண்டாவது நடைமேடைக்கு அருகில் உள்ள வாகன பார்க்கிங் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. தகவலறிந்து நிகழ்விடத்திற்கு சென்ற தீயணைப்புத்துறையினர் பல மணிநேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட நிலையில், இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடந்துவருகிறது.