விருதுநகர் பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து

 
ழ்

விருதுநகர் மாவட்டம் கட்டுனார்பட்டி கிராமத்தில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது.

விருதுநகர் மாவட்டம் கட்டுனார்பட்டி கிராமத்தில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. வனஜா என்ற பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தால், அப்பகுதியில் வானுயர புகை எழுந்தது. உடனே அப்பகுதி மக்கள், தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். வெடிவிபத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. ஒரு சிலர் ஆலையில் சிக்கியிருக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.