#BREAKING ரூ.1000 கோடியில் லைட் ஹவுஸ்- திருவிக பாலம் வரை பிரம்மாண்ட பறக்கும் பாலம்

 
s

சென்னை மாநகரின் கடுமையான போக்குவரத்து நெரிசலை குறைக்க தமிழக அரசு மிகப்பெரிய திட்டத்தை கையில் எடுத்துள்ளது.


சென்னையில் *லைட் ஹவுஸ் (Light House) முதல் திரு.வி.க. பாலம் (Thiru. Vi. Ka. Bridge) வரை சுமார் 4 கிலோமீட்டர் தூரத்திற்கு பிரம்மாண்ட உயர்மட்ட பறக்கும் சாலை (Elevated Corridor) அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பான விரிவான திட்ட அறிக்கை (Detailed Project Report - DPR) தயாரிக்கும் பணிக்கான Terms of Reference (TOR) ஆவணத்தை நெடுஞ்சாலைத்துறை வெளியிட்டுள்ளது. 

காலை, மாலை நேரங்களில் மெரினா, சாந்தோம், அடையாறு, மந்தைவெளி சாலைகளில் ஏற்படும் கடுமையான டிராபிக் ஜாம் இதன் மூலம் முற்றிலும் குறையும். குறிப்பாக சாந்தோம் நெடுஞ்சாலையில் வாகனங்கள் சீராக செல்ல முடியும். கடற்கரை சாலையை இணைக்கும் இந்த பறக்கும் சாலை சென்னையின் மிக முக்கியமான உள்கட்டமைப்பு திட்டமாக பார்க்கப்படுகிறது. தற்போது DPR தயாரிக்க கன்சல்டன்ட் நியமிக்கப்பட்ட பிறகு, அடுத்தகட்டமாக கட்டுமானப் பணிக்கான டெண்டர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.