திருச்செந்தூரில் அதிகாரிகள் கூண்டோடு மாற்றம்- அமைச்சர் ரமேஷ் அதிரடி
திருச்செந்தூர் திருக்கோவிலில் கடந்த சில நாட்களுக்கு முன் அமைச்சர் ரமேஷ் ஆய்வு செய்த நிலையில், இணை ஆணையாளர், உதவி ஆணையாளர், துணை ஆணையாளர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
முருகனின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில்களில் தினமும் பல்லாயிரக்கானோரும் விடுமுறை நாட்களில் லட்சக்கணக்கானோர் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்களிடம் கூட்டத்திற்கு தகுந்தார்போல் விரைவு தரிசனத்திற்கு அனுமதி அளிக்க தலா 2000 முதல் 10 ஆயிரம் வசூலிக்கப்படுகிறது. இதில் கோயில் உயர் அதிகாரி முதல் கடை நிலை ஊழியர்கள் அனைவருக்கும் பங்கு போவதாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர். இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் ரமேஷ் இது தொடர்பாக வந்த புகாரின் பேரில் பக்தரை போல தரிசனத்திற்காக வந்து ஆய்வு செய்தபோது விரைவு தரிசனத்திற்கு முறைகேடாக பணம் வசூலிப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த விவகாரத்தில் பலருக்கு தொடர்பு உள்ள நிலையில் திருச்செந்துார் கோவில் பாதுகாவலர்கள் 2 பேர் டிஸ்மிஸ் செய்யப்பட்டனர். முடி இறக்கும் தொழிலாளர்கள் 2 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அர்ச்சகர் ஐயப்பன் கோவிலில் பூஜை செய்ய தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது திருச்செந்தூர் முருகன் கோயில் இணை ஆணையர் ராமு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருவேற்காடு கருமாரியம்மன் கோயில் இணை ஆணையர் அருணாச்சலம் நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோன்று இங்கு உதவி ஆணையர் மெய்வேல் மாற்றப்பட்டு மதுரை மீனாட்சி லோகநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். காலியாகவுள்ள இக்கோயிலின் துணை ஆணையர் பணியிடத்தில் திருச்சி நகை சரிபார்ப்பு துணை ஆணையர் யக்ஞ நியமனம் செய்து அறநிலையத்துறை செயலாளர் குமரகுருபரன் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

