மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் முதல்வருடன் சந்திப்பு!!

 
tn

18வது மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மதுரை, திண்டுக்கல் ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடுகிறது. மதுரை நாடாளுமன்றத் தொகுதியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரும், தற்போதைய மதுரை நாடாளுமன்ற உறுப்பினரும், சாகித்ய அகாதெமி விருது பெற்றவருமான தோழர் சு.வெங்கடேசன் எம்.பி., அவர்களையும், திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினரும், திண்டுக்கல் மாவட்டச் செயலாளருமான  தோழர் ஆர்.சச்சிதானந்தம் அவர்களையும், வேட்பாளர்களாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு ஏகமனதாக தீர்மானித்துள்ளது என்று  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்திருந்தார். இந்நிலையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் மதுரை, திண்டுக்கல் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் தோழர் சு.வெங்கடேசன், R.சச்சிதானந்தம் ஆகியோர் இன்று திமுக தலைவர்  @mkstalin நேரில் சந்தித்தனர். உடன், கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக் குழு உறுப்பினர் பி.சம்பத், மத்தியக்குழு உறுப்பினர் பெ.சண்முகம், உள்ளிட்டோர் உள்ளனர்.