அரசு ஊழியர்களுக்கு திருமண முன்பணம்! திருமணத்துக்கு 180 நாள் முன்பும், திருமணம் முடிந்து 60 நாள் வரையும் விண்ணப்பிக்கலாம்
தற்போது, அரசு ஊழியர்கள், திருமணத் தேதிக்கு 180 நாட்களுக்கு முன்பு வரை மட்டுமே திருமண முன்பணத்திற்கு விண்ணப்பிக்க முடியும். தவிர்க்க முடியாத சூழலில் குடும்பங்களில் காரணமாக, நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் முன்பணத்தை பெற முடியாத தகுதியுள்ள ஊழியர்களுக்கு பயன்பெறும் வகையில், திருமணமான நாளிலிருந்து 60 நாட்கள் வரை விண்ணப்பங்களை அனுமதிக்க, தற்போதுள்ள விதிமுறை திருத்தப்பட்டுள்ளது.
பணியாளர்களுக்கு திருமண முன்பணம் வழங்குவதற்கான திருத்தியமைக்கப்பட்ட விதிகளில், திருமணம் நடைபெறுவதற்கு நான்கு மாதங்களுக்கு முன்னர், திருமண முன்பணத்திற்கான விண்ணப்பத்தை பெறக்கூடாது என தெரிவிக்கப்பட்ட கால வரம்பைதிருத்தம் செய்து அரசு ஆணையிட்டுள்ளது. அதன்படி, அரசு ஊழியர்கள் திருமண தேதிக்கு 180 நாட்கள் முன்பிருந்தும், திருமணமான நாளிலிருந்து 60 நாட்கள் வரையும் திருமண முன்பணத்திற்கு விண்ணப்பிக்கலாம். என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய நடைமுறை தாமதங்கள் அல்லது தவிர்க்க முடியாத சூழ்நிலைகள் காரணமாக தகுதியுள்ள ஊழியர்கள் இந்தப் பயனை இழக்காமல் இருப்பதை உறுதி செய்யும் என்று அரசு தெரிவித்துள்ளது.

